மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ இமாதம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த பொன்.ராம் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
24 ஏ.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘சீமராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...