சந்தானம் ஹீரோவாக நடித்திள்ள ‘சக்க போடு போடு ராஜா’ கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்ட சந்தானத்திடம் அரசியல், சிம்பு விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளுடன், சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக டிசம்பர் 22 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறீர்களா? என்றும் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சந்தானம், “சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமாகத் தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்' படத்திற்கு தான் `சக்க போடு போடு ராஜா' படம் போட்டியாக இருக்கும்.
விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என 5 காமெடியன்கள் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு நாளை நடைபெறும் `சக்க போடு போடு ராஜா' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்.
அதேபோல், அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.” என்று தெரிவித்தார்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...