Latest News :

இயக்குநர் சேரனுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை!
Tuesday December-05 2017

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் நடுகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ள விஷால், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்க வேண்டும், என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, தயாரிப்பாளர்கள் பலரை திரட்டி போராட்டமும் நடத்தி வருகிறார்.

 

சேரனின் இத்தகைய செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஷால், சேரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன.

 

ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத் தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது. 

 

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான். என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். 

 

எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. 

 

இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். 

Related News

1436

முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகும் ‘ராட்ட’!
Monday January-05 2026

2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...

’திரெளபதி 2’ மூலம் மக்கள் அறியாத வரலாற்றை பேசியிருக்கிறேன் - இயக்குநர் மோகன் ஜி
Monday January-05 2026

’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...

VCare நிறுவனத்துடன் கைகோர்த்த பிரியா ஆனந்த்!
Monday January-05 2026

VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...

Recent Gallery