Latest News :

ஹாலிவுட் நடிகரை வியப்பில் ஆழ்த்திய அஜித்!
Saturday August-05 2017

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே தற்போது எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது அஜித்தின் ‘விவேகம்’ படத்தை தான். இம்மாதம் 24 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அஜித்து சிலை வைத்து அவரது ரசிகர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர், அஜித்துடன் தான் பணியாற்றிய அனுபவத்தை பற்றி பேசும் போது, அஜித் செய்த ஆக்‌ஷன் காட்சிகள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

 

சரவதேச தரத்தோடு, தமிழ் சினிமாவின் முதல் உளவாளி படமாக உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில், ‘கேசினோ ராயல்’ (Casino Royale), ‘300 : ரைஸ் ஆப் அன் எம்பயர்’ (300: Rise Of An Empire), ‘தி டிரான்ஸ்போர்ட்டர் ரீபண்டெட்’ (The Transporter Refunded) போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் (Serge Crozon Cazin) நடித்திருக்கிறார்.

 

அஜித் அணியில் இடம்பெற்ற ஐந்து பேர்களில் ஒருவராக ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ள சர்ஜ் க்ரோசோன் கஜின், தனது அனுபவத்தை கூறுகையில், “விவேகம் போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான இண்டர்வீயூவில் கலந்து கொண்ட பிறகே இயக்குநர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின்  தெளிவும் என்னை ஈர்த்தது. அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். 'விவேகம்' படத்தில் எனது காட்சிகளை முடித்த பின் வீடு திரும்பிய போதுதான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதை தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி  சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர். படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்களை எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள 'விவேகம்' படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள்.” என்றார்.

Related News

144

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery