உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் 'நிமிர்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்றுள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது.
சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் 'நிமிர்'. இப்படத்தை சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ளார்.
இது குறித்து விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போடு உள்ளோம். 'நிமிர்' அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்.” என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...