பிரபல இசையமைப்பாளர் ஆதித்தன் நேற்று மதியம் ஐதராபாத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63.
நடிகர் கார்த்திக் நடித்த, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சூப்பர் டுப்பர் ஹிட் பாடல்களான ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன். ‘அமரனை’ தொடர்ந்து நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், அசுரன், மாமன் மகள், சூப்பர் குடும்பம் கடைசியாக கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார்.
சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஒருவார காலமாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த ஆதித்யன், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல் நாளை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது. நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும்.
டைடஸ் என்ற இயற்பெயர் கொண்ட ஆதித்யனுக்கு ஷோபியா என்ற மனைவியும், ஷரோம், பிராத்தனா என்ற இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஐதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...