‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோபாலன் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.
‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.
1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.
இந்த படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தேதி பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகியதாக அமலாபால் அறிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக தற்போது ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...