மெர்சல் படத்தின் வெற்றியால் பாலிவுட்டிலும் விஜய் பிரபலமாகியுள்ளார். ஆனால், அதற்கு முன்பாகவே பாலிவுட் பெண் இயக்குநரை விஜய் கவர்ந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
அவர் தன் பராகான். நடன இயக்குநராக இருந்து திரைப்பட இயக்குநரான பராகான், விஜய் நடித்த நண்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றினார். அப்போது விஜயின் நடனத்தை ரொம்பவே ரசித்தாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய பராகான், “விஜயின் நடனத்தை பார்த்து பல முறை பிரம்மித்துள்ளேன். அவருடைய நடனத்தை பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு முன் மாதிரியாக காட்டலாம். மீண்டும் விஜயுடன் நிறைய பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்ற விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
ஜீ5 ஓடிடி நிறுவனத்தின் புதிய இணையத் தொடரான ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்’ (Once Upon A Time in Kayamkulam) படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது...
’மாயபிம்பம்’ 2005-ஆம் ஆண்டு காலகட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு அழகான காதல் திரைப்படம்...
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது...