அனுஷ்கா, நாகர்ஜூனா, ஜெகபதிபாபு, சாய் குமார், பிரம்மானந்தம், சம்பத் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன்’. ராமா என்ற வெங்கடேசபெருமாளின் பக்தர் பற்றிய உண்மை வாழ்க்கை சம்பவமான இப்படத்தினை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள இவர் தான் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார் வியந்து போய் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
படம் குறித்து கூறிய சிவகுமார், “அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரமாண்டமாக எடுக்கப் பட்டுள்ளது. பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது.” என்று பாராட்டியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...