கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நாட்டாமை படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த நடிகையை யாராலும் மறக்க முடியாது.
பூனை சத்தத்தின் பின்னணி இசையோடு அவர் எண்ட்ரி கொடுக்கும் காட்சிகளில் ரசிகர்கள் சொர்க்கத்திற்கே சென்று வந்தது போல நினைத்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு தனது பேச்சிலும், நடிப்பிலும் கவர்ச்சியை வெளிக்காட்டிய அந்த நடிகை பெயர் ரக்ஷா.
1992 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான ‘வில்லுப்பாட்டுக்காரன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ரக்ஷா, தொடர்ந்து தமிழ், தெலிங்கு, மலையாளம் என்று பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர், வாய்ப்பு குறைந்ததும் கவர்ச்சி வேடங்களிலும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்தார். பிறகு பாலிவுட் தயாரிப்பாளரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். தற்போது இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மீண்டும் நடிக்க வந்துள்ள ரக்ஷா, தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறியிள்ள ரக்ஷா கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன், என்றும் கூறியுள்ளார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...