அஜித் என்றாலே ஸ்பெஷல் தான். காரணம், அவர் வேண்டாம் என்றாலும், அவருக்காக பல லட்ச ரசிகர்கள் இருக்கிறார்கள். வெட்டி பந்தா, வீண் விளம்பரங்களை தேடாத அஜித்தை எங்கயாவது தென்பட்டு விட்டால் அவரது ரசிகர்கள், ஏதோ தெய்வத்தை பார்த்தது போல கொண்டாட தொடங்கி விடுகிறார்கள்.
இந்த நிலையில், அஜித்தின் மகன் ஆத்விக் படிக்கும் பள்ளியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளைப் பார்க்க அஜித் நேரில் சென்றுள்ளார். தனது மகன் விளையாடுவதை மற்ற பெற்றோர்களுடன் ஒரு ஓரமாக நின்று அஜித் பார்க்கும் புகைப்படமும், தனது மகனை தோளில் தூக்கிக் கொண்டு நடக்கும் புகைப்படமும் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேலும், அந்த புகைப்படங்களில் அஜித்தின் ஹேர் ஸ்டையிலும் வித்தியாசமாக இருப்பதை கவனித்த அவரது ரசிகள், அஜித்தின் அடுத்த படத்தின் கெட்டப் என்ற தலைப்பில் பேனர் அடிக்க தொடங்கிவிட்டார்கள்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...