Latest News :

நடிகரான இயக்குநர் சுசீந்திரன்!
Friday December-08 2017

ஒரு படத்தின் தலைப்பு ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் இருக்க  வேண்டும், கதைக்கும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.  அவ்வாறு தலைப்பிட பட்ட படம் தான் " சுட்டுப்பிடிக்க உத்தரவு".  மிகுந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தை இயக்குபவர் ராம் பிரகாஷ் ராயப்பா. "தமிழில் எண் ஒன்றை அழுத்தவும்"  என்ற வெற்றி படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.  

 

இப்படத்தை 'கல்பதரு பிக்சர்ஸ்' சார்பில் திரு. P K ராம் மோகன் தயாரிக்கவுள்ளார்.  இயக்குனர் மிஷ்கின், மற்றும் விக்ராந்த்  ஆகியோர் பிரதான கதா பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் பிரபல இயக்குனர்  சுசீந்திரனும் நடிக்க உள்ளார் என்பது சிறப்பு செய்தி. கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள்  விரைவில் அறிவிக்கப்படவுள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

 

இப்படம் குறித்து இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா பேசுகையில், “விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான 'கிரைம்' நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிக்கின்றார். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதே இந்த கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உக்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது.” என்றார்.


Related News

1469

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery