Latest News :

பணத்திற்காக தான் எல்லாமே! - டிவி நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்
Monday December-11 2017

நடிகையும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி பல சர்ச்சைகள் வருவதுண்டு. நிகழ்ச்சியில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.

 

இதுபற்றி அவர் கூறுகையில், ”மருத்துவர் ஆலோசனை சொல்வது போல தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் இதை தொலைக்காட்சியில் போடுவோம் என்று எல்லாம் தான் தெரிஞ்சு தான் மக்கள் வருகிறார்கள். யாரையும் நாங்கள் கூட்டி வருவதில்லை. அவர்களாகவே தான் விரும்பி வருகிறார்கள். இதை வியாபாரம் என்று சொல்லாதீர்கள், மருத்துவர் நோயை குணப்படுத்த பணம் வாங்குவதால் அதை வைத்து வியாபாரம் செய்கிறார் என்று கொச்சைப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மேலும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவதற்காக சில இசையை சேர்த்து ப்ரோமா செய்கிறார்கள் என்பது உண்மை தான். இது தொண்டு நிறுவனம் அல்ல, நான் பணம் வாங்கிக்கொண்டு தான் நிகழ்ச்சி செய்கிறேன். ஆனால் சமூக பொறுப்போடு தான் இதை செய்கிறேன்,  என்றும் அவர் கூறினார்.

Related News

1484

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery