தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுப்பதை தவிர்த்து வந்த நடிகர் மயில்சாமி, சமீபகாலமாக டிவி-க்களில் நடக்கும் அரசியல் சார்ந்த விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்தும் சில சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீடு வீடாக சென்று மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், நடிகர் மயில்சாமி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு தே.ப.பா.க என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றாலும், இது தொடர்பான போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே மயில்சாமியில் புதிய அரசியல் கட்சியா அல்லது திரைப்படத்திற்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர போஸ்டாரா? என்ற சந்தேகமும் உள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...