விரைவில் வெளியாக உள்ள ‘பலூன்’ படத்தை தொடர்ந்து ஜெய் நடித்து வரும் படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் இப்படத்தில் ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடிக்கிறார்.
தற்போது படப்பிடிப்பில் உள்ள இப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா திடீரென்று விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்காதபடி, உடனடியாக மற்றொரு பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்.டி.ராஜசேகரை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அரவிந்த் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதை தெரிவித்த படக்குழுவினர், அரவிந்த் கிருஷ்ணா விலகியதற்கான காரணத்தை சொல்லவில்லை.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...