சிவகார்த்திகேயன், நயந்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது. அதிலும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குடிசைப் பகுதி செட் ரசிகர்களால் பேசப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருக்கும் குடிசைப் பகுதியை பல கோடி செலவில் தத்ரூபமாக உருவாக்கியுள்ள கலை இயக்குநர் முத்துராஜ், கூவம் ஆறு ஒன்றையும் உருவாக்கியுள்ளாராம்.
இது குறித்து கூறிய முத்துராஜ், “கதைப்படி இப்படத்தின் கதாநாயகனும் நண்பர்களும் இந்த ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் ஒரு பெரும் பகுதி இந்த ஏரியாவில் தான் நடக்கின்றது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தான் இந்த முழு எரியவையே செட்டாக போட்டுவிடலாம் என்ற யோசனையை தந்தார். இந்த செட்டிற்காக சுமார் பத்து முதல் பதினைந்து இடங்களை நேரில் சென்று பார்த்து, அங்கு வாழும் மக்களின் வாழ்வு முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த செட்டை உருவாக்கினோம்.
இந்த செட்டை முழுவதும் முடிக்க சுமார் 55 நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தை சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு தத்ரூப ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக இருந்தது. உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும்.
மேலும் எதார்த்தத்தை கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாக வடிவமைத்தோம். நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த எரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம். இந்த முழு செட்டையும் சுற்றி ஒரு கூவத்தையும் உருவாக்கியுள்ளோம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலுமே இவ்வளவு பெரிய செட் சாத்தியமானது.
இந்த படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு நிச்சயம் கொண்டு போகும். இயக்குனர் மோகன் ராஜாவின் கதை மற்றும் எழுத்து மிக சிறப்பாக அமைந்துள்ளது. எங்கள் எல்லோரின் ஒட்டுமொத்த உழைப்பையும் பாராட்டி இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
ராம்ஜி ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது.
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...