ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, தற்போதும் நடிப்பதை தொடர்ந்துக் கொண்டிருக்க, அவரது மகள் நைனிகாவும் நடிக்க தொடங்கியுள்ளார். விஜயின் ‘தெறி’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அரவிந்த்சாமி - அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும் நைனிகா நடித்துள்ளார்.
இந்த நிலையில், விஜய் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியான படம் ஒன்றால், தற்போதும் நடிகை மீனா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதை மீனாவே கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய மீனா, “சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம். இவர் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய ப்ரண்ட்ஸ் படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அதை நினைத்தால் இப்போதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் இப்போது அவருடைய படத்தில் என் மகள் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...