Latest News :

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திற்காக அரவிந்த் சாமி செய்த புது முயற்சி!
Thursday December-14 2017

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரியான அரவிந்த் சாமி, அதிரடி வில்லனாக சில படங்களில் அசத்தினாலும், தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அந்த வகையில், அரவிந்த் சாமி ஹீரோவாக நடிக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இதில் ஹீரோயினாக அமலா பால் நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தை ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்க, அம்ரேஷ் இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குனர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப்ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயச்சித்ரா ஆகிய திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், “இயக்குநர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த படத்திற்காக என்னை தேர்வு செய்ததற்கு. இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். ஸ்டண்ட் மாஸ்டர் விஜயன் அவர்களின் 500 வது படத்தில் நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. படத்தில் ரோபோ மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்." என்றார்.

 

தயாரிப்பாளர் பேசிய போது, “பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்கமலேயே அர்விந்த் சாமி இப்படத்தில் நடித்து கொடுத்தார். இயக்குனர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு நன்றாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது." என்று கூறினார். 

 

ஜெயச் சித்ரா பேசிய போது, “அம்ரேஷ் எனது மகன், இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் நிற்க செய்துள்ளான். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப் பட்டது. தற்போது இந்த மேடையில் இருந்த அறிஞர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர், பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார். 

Related News

1518

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery