Latest News :

சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் 'நவீன எந்திரன்'!
Thursday December-14 2017

நல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு அகிரா டெக்னாலஜிஸ் என்னும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம் நடத்தும் செந்தில் நாயகம், கணபதி, மற்றும் மார்ஸ் ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை காண முயற்சித்தார்.  

 

ஒராண்டில் ஒர் நிகரில்லா தீர்வுடன் வந்துவிட்டது. ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ரசிகர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே பல தகவல்கள் அளிக்கவும் நாம் கேட்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா சார்ந்த குறிப்பிட்ட சந்தேகங்களுக்கும் விடையளிக்க பிறந்துவிட்டான் @CIFFCHATBOT என்னும் chat bot.

 

CHAT BOT என்பதை சுலபமாக விளக்க வேண்டும் என்றால் நம் சந்தேகங்களை போக்கும் கஸ்டமர் சர்வீஸ் செயலி என்று சொல்லலாம். இந்த தொழில்நுட்பத்தில் சிறப்பான தனித்துவமான விஷயம் என்ன வென்றால் சந்தேகம் கேட்பவர்களுக்கு ஏற்கனவே பதிந்து வைத்த தகவலை ஒரே மாதிரியாக தராமல், கேட்கும் கேள்வியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற சரியான பதில் தரும் செயலிதான் இந்த chatbot. TELEGRAM, FACEBOOK MESSENGER, SKYPE போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த செயலியை @ciffchatbot என்னும் முகவரியில் இதை பயன் படுத்தலாம்.

 

சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர காத்திருக்கிறது எங்கள் chatbot, கோவா, கேரளா என்று எந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இது போன்ற ஒரு தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தவில்லை, இதுவே முதல் முறை என்பது தமிழக அரசுக்கும், சென்னை சர்வதேச படவிழா குழுவினருக்கும் பெருமையான விஷயம் என்று அகிரா டெக்னாலஜிஸ் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

 

சென்னை திரை நேசிகள் இந்த வருடம் @CIFFCHATBOT என்ற CHATBOT  மூலம் அடையும் பயனால் வருங்காலங்களில் இது மக்கள் கூடும் வேறு பல விழாக்களுக்கும் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பை துண்டுகிறது அகிரா டெக்னாலஜிஸ் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்தினரின் இந்த தொழில்நுட்ப செயலி.

 

இந்த செயலியை பயன்படுத்துவதில் சந்தேகம் உள்ளவர்கள் சென்னை சர்வதேச சினிமா நேசிகள் 9789919961என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து இந்த செயலியின் பயன்பாட்டை துவங்கலாம்.

Related News

1520

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery