தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், நடிகர் விஜய் செய்வதை காப்பியடிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். படங்களில் மட்டும் அல்லாமல், படம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் விஜய் செய்வது போலவே அவர் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, ‘வேலைக்காரன்’ படம் முடிந்ததும், படத்தில் பணி புரிந்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் பேர்வல் பார்ட்டி கொடுத்தார். இதையும், அவர் விஜயை பார்த்து காப்பியடித்து விட்டார், என்று சிலர் கூறினார்கள்.
இதற்கு விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன், ”சரியான விஷயத்தை தான் விஜய் சார் செய்வார். அவர் செய்துவிட்டார் என்பதற்காக நான் செய்யாமல் இருப்பது தான் தவறு. அவரை பின்பற்றி தான் நான் இதையெல்லாம் செய்கிறேன் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...