Latest News :

பிற ஹீரோக்களில் இருந்து சிவா வேறுபடுகிறார் - மனம் திறந்த மூத்த நடிகர்!
Friday December-15 2017

சிவகார்த்திகேயன், நயந்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ வரும் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் குறித்து வெளியாகும் தகவல்களால், படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.

 

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடித்துள்ள சார்லி, தனது நல்ல குணத்தாலும், எளிமையாலும் மற்ற ஹீரோக்களிடம் இருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார், என்று கூறியுள்ளார்.

 

இது குறித்து மேலும் கூறிய சார்லி, “வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகி விடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.

 

இப்படத்தில், திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும், எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் - தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது. இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதரவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். 

 

இயக்குநர் மோகன் ராஜா, ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்' என்று தான் கூறவேண்டும்.” என்றார்.

Related News

1528

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery