'இமை' படத்துக்காக அதில் நாயகனாக நடிக்கும் சரிஷ் சிரமப்பட்டுத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
படு கரடு முரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை தான் 'இமை'. இப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளவர் சரிஷ்.
படத்தில் நடித்த சரிஷ் தன் அனுபவம் பற்றிக் கூறும் போது, "இது ஒரு ரவுடி சார்ந்த கதைதான் என்று கேள்விப்பட்டதுமே என் தோற்றத்தை இயக்குநர் கூறியபடி மாற்ற ஆரம்பித்தேன். கொழு கொழு உடம்பை இளைக்க வைத்தேன். தாடி வளர்க்கத் தொடங்கினேன். தலையைச் சரியாக வாராமல் முடியை வளர்த்தேன். என் நிறத்தை மங்கலாக்க வெயிலில் நின்று கறுத்தேன்.
இவ்வளவும் செய்து மாறிய பின் , என் தோற்றம் இயக்குநருக்குப் பிடித்து ஒரு வழியாகத் திருப்தி வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கே போனோம்.
படப்பிடிப்பில் நடித்துப் பார்த்த போது தான் நடிப்பு என்றால் எவ்வளவு சிரமம் என்று புரிந்தது. ஒவ்வொரு படமும் எவ்வளவு கஷ்டங்களுக்குப் பின் உருவாகி வருகிறது என்பது புரிந்தது.
இப்போதெல்லாம் ரசிகர்களை ஏமாற்ற முடியாது. சின்சியரான உழைப்பும் தேவை. யதார்த்தமும் இருக்க வேண்டும். இவை இரண்டுமே இமை படத்தில் இருக்கும்.
இப்படத்தை இயக்கியிருப்பவர் விஜய் கே.மோகன் .இவர் ஏற்கெனவே மலையாளத்தில் 'நளசரிதம் நாலாம் திவசம் ' ,'வேனல் மரம் 'என இரு வெற்றிப் படங்களை இயக்கியவர். என்னை நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். படத்தை ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி. டோரி தயாரித்துள்ளார். முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்களில் நடித்து அவை வெளியாகவுள்ளன.
தமிழக ரசிகர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. புதியவர்களை வரவேற்பார்கள். திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் ஊக்கம் தருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, ஊட்டி, கேரளாவிலுள்ள சாலக்காடு, கொல்லங்கோடு, கோவிந்தபுரம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
நல்லதொரு விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்படி ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வி.கே.பிரதீப் . இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் பணியாற்றியவர்.
இசையமைப்பாளர்கள் மிக்கு காவில் மற்றும் ஆதி ஃப் என இருவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.பாடல்கள்- யுகபாரதி , நடனம் _ தீனா, ஸ்டண்ட் - டேஞ்சர் மணி , ஒப்பனை மிட்டா ஆண்டனி .
நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் விரைவில் 'இமை' வெளியாகவுள்ளது.” என்று தெரிவித்தார்.
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...
ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்ஸ்ஜில்லா’...