சினிமாவில் நடிகைகளுக்கு எதிர்கொள்ளும் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில், தொலைக்காட்சிகள் மற்றும் சீரியல்களில் பணியாற்றும் நடிகைகளும் தங்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் பற்றி கூறத் தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான ‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த திவ்யா, தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய திவ்யா, “நான் அப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு எனக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அடுத்த நாள் நடிக்க போகிறேன், சீரியல் குழு அதிகாரி ஒருவர் இரவு என்னை அரைகுறை ஆடை புகைப்படம், ஆடையில்லா புகைப்படம் அனுப்புங்கள் என்று கேட்டார்.
இதை கேட்டதும் நான் அதிர்ந்துவிட்டேன், இருந்தாலும் அந்த நேரம் பயப்படாமல், அவரை எதிர்த்து கேள்விகள் கேட்டதால், அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...