அகில் அக்கினேனியின் நடனத்தை திரையில் பார்க்க மிகவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள். நடனத்துக்கு பெயர் பெற்ற அகில், தன் நடனத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை ரசிகர்களை ஹலோ படத்தின் திருமண பாடலான மெரிஸ் மெரிஸ் மூலம் கவர்ந்திழுக்க இருக்கிறார். கண்கவர் அரங்க அமைப்பு, துள்ளலான இசை, அற்புதமான நடன அசைவுகள், அழகான ஆடைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை காண்பித்த பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலில் முக்கிய நட்சத்திரங்களான நாயகி கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு ஆகியோர் ஆத்மார்த்தமான உணர்வுகளோடு நடனம் ஆடியிருக்கிறார்கள்.
கலை இயக்குனர் ராஜீவன் நம்பியார் கைவண்ணத்தில் 2 கோடி செலவில் மிக ஆடம்பரமாக, பளபளப்பான அரங்கத்தை உருவாக்கினார்கள். இதற்காக இரண்டு வாரங்களாக 60 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து உருவாக்கியிருக்கிறார்கள். நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் ஆடை வண்ணங்களுக்கு ஏற்ப, அரங்கத்தின் வண்ணங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ராஜீவன்.
'மனம்' பட புகழ் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தின் ட்ரைலரை ஒரே வாரத்தில் 10 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் நாகார்ஜூனா தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளைஞர்களின் ஃபேவரைட் அனூப் ருபன் இசையமைத்திருக்கிறார். படத்தில் வரும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட்டில் இருந்து பாப் பிரவுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படம் டிசம்பர் வெளியாகும் நெருங்க, நெருங்க உற்சாகமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ரசிகர்களும் ஹலோ சொல்ல காத்திருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயமே.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...