தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் பிரமாண்டமான 'நட்சத்திர விழா 2018' வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவிலுள்ள புக்கட் ஜலீல் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அன்று முழுவதும் நடைபெறுகிறது.
இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் மூத்த நடிகர் நடிகைகளும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.
மேலும் எல்லா நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்ள வசதியாக ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகளுக்கு விடுமுறை அளிக்குமாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜனவரி 5,6 ஆகிய இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்து விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...