‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பிறகு ஜெய் - அஞ்சலி மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘பலூன்’. திகில் படமான இப்படத்தை அறிமுக இயக்குநர் சினிஷ் இயக்க, ஆரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜெய் மூன்று விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, எப்போதும் போல ஜெய் மிஸ்ஸிங்.
ஜெய் கலந்துக் கொள்ளாதது குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “ஜெய் படத்தின் ஹீரோவே இல்லை. கதை தான் ஹீரோ” என்று கூறியதோடு, “ஜெய் புரோமோஷன் விரும்பாதவர். தனக்கு புரோமோஷன் வேண்டாம், படம் நன்றாக ஓடினால் போதும் என்று கூறிவிட்டார்” என்றார்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...