‘விவேகம்’ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு ’விஸ்வாசம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது.
அரசியல் கதை களத்தைக் கொண்ட இப்படத்தில் வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர், அஜித் படங்களில் வில்லன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்றதற்கு, “இல்லை” அரவிந்த்சாமி பதில் அளித்தார்.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...