பெண்களை கவர்ந்த ஹீரோவாக திகழ்ந்த அரவிந்த்சாமி ‘என் சுவாசக் காற்றே’ படத்திற்குப் பிறகு காணாமல் போனார். அதன் பிறகு உடல் எடை அதிகரித்து, தலையில் முடி கொட்டி, ஆளே மாறிப்போனவர் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
இதற்கிடையே ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த்சாமியை மீண்டும் மணிரத்னம் அழைத்து வந்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் பழைய அழகு அரவிந்த்சாமியாக களம் இறங்கியவர், வில்லனாக மிரட்டியதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
தற்போது ஹீரோவாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ மற்றும் மணிரத்னம் படம் என்று மீண்டும் பிஸியாகியிருக்கும் அரவிந்த்சாமி, விரைவில் படம் ஒன்றை இயக்கப் போகிறாராம். அடுத்த ஆண்டு அவர் இயக்குநர் ஆவது நடக்கும், என்று அவரே சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...