பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி, தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே திருமணமாகி ஒரு சில ஆண்டுகளிலேயே தனது கணவரை பிரிய டிடி விவாகரத்தும் கேட்டிருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை டிடி திருமணம் செய்துக் கொண்டார். இரு வீட்டார் சம்மதத்தோடு இந்த திருமணம் நடைபெற்றாலும், திருமணத்திற்கு பிறகு டிடி தொகுப்பாளினியாக பணியாற்றுவது ஸ்ரீகாந்த் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லையாம். மேலும், டிடி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியது, அவரது மாமியார் குடும்பத்தாரை ஆத்திரப்பட வைத்ததாம்.
அவர்கள் எவ்வளவும் சொல்லும், டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மற்றும் படங்களில் நடிப்பதை டிடி நிறுத்தவில்லையாம். இதனிடையே ஸ்ரீகாந்துக்கும் டிடி க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், நேற்று முறைப்படி நீதிமன்றத்தில் டிடி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...