சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே 22 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது. இப்படத்தில் முதல் முறையாக விவேக் மற்றும் சந்தானம் இணைந்திருப்பதோடு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல காமெடி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கான புரோமோஷன் பணியில் பிஸியாக இருக்கும் சந்தானம், நேற்று சென்னையில் நடைபெற்ற சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
மேலும், சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய சந்தானம், உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளித்தார்.
அப்போது, கவுண்டமணியிடன் சேர்ந்து எப்போது நடிப்பீர்கள், அவருக்கு மகனாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?, என்றதற்கு “நான் கவுண்டமணி சாரின் பெரிய ரசிகன், அவருடன் சேர்ந்து நான் நடித்தால், அது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும், அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் கதைக்களம் அமைய வேண்டும். அப்படி ஒரு கதை அமைந்தால் அவருடன் நிச்சயம் சேர்ந்து நடிப்பேன்.
அதேபோல், அவருக்கு நான் மகனாக நடிக்க ரெடிதான். ஏன், நான் அப்பா வேடத்திலும், அவர் மகன் வேடத்தில் கூட நடிப்போம், சினிமாவில் இதெல்லாம் சகஜம் தனே” என்றார்.
மேலும், இந்து மதத்தை உயர்த்தி பேசும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஆசைப்படும் சந்தானம், அப்படிப்பட்ட படத்தில் விரைவில் நடிப்பதோடு, விரைவில் ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...