Latest News :

மகள் வயது நடிகையை திருமணம் செய்யும் பிரபல வில்லன் நடிகர்!
Wednesday December-20 2017

நடிகர், நடிகைகள் காதலிப்பது புதிதல்ல என்றாலும், மகள் வயது நடிகையை, தந்தை வயதுடைய பிரபல வில்லன் நடிகர் காதலித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரபல மாடலும், பாலுவுட் நடிகருமான மிலிந்த் சோமன், தமிழில் கெளதம் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

 

52 வயதாகும் மிலிந்த சோமன், 23 வயதாகும் அன்கிட்டா கெளரவை காதலித்து வருவது முன்பே பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்கிட்டா கெளரவின் குடும்பத்தை சமீபத்தில் சந்தித்து பேசிய மிலிந்த் சோமன், அன்கிட்டா கெளரவை திருமணம் செய்துக் கொள்வது குறித்து பேசியதாகவும், திருமணத்திற்கு அன்கிட்டாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதையடுத்து, மிலிந்த் சோமன் - அன்கிட்டா கெளரவின் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related News

1570

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery