Latest News :

சன்னி லியோனுடன் இணையும் பிரபல நடிகையின் மகன்!
Wednesday December-20 2017

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகாக வலம் வந்தவர் ஜெயசித்ரா, நடிகையாக மட்டும் இன்றி இயக்குநராகவும், தயாரிப்பாளருவும் திகழும் இவரது மகன், அம்ரேஷ் நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானாலும், தற்போது இயக்குநராக வெற்றி பெற்று பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

 

’மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபலமான அம்ரேஷ் கணேஷ் இசையில், ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘யங் மங் சங்’, ‘கர்ஜனை’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

 

இதற்கிடையே, சன்னி லியோன் நடிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட சரித்திரப் படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இது குறித்து பேசிய அம்ரேஷ் கணேஷ், “இயக்குநர் வடிவுடையான் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்ன பொழுது வியந்து போனேன். அருமையான கதையம்சம் கொண்ட மிக பிரம்மாண்அ படம் இது. இது போன்ற ஒரு சரித்திர பின்னணியுள்ள படத்திற்கு இசையமைப்பது ஒரு சவாலான காரியமாகும். இப்பட பாடல்கள் ரெக்கார்டிங்கிற்கு வெளிநாடு செல்ல உள்ளோம். பண்டைய கால இசை கருவிகள் பலவற்றை பயன்படுத்தி புது விதமான ஒலியை கொண்டு வர உள்ளேன். எல்லோராலும் ரசிக்கப்பட்டு பேசப்படும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமை அமைக்க முனைப்போடு உள்ளேன். சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு இந்திய அளவில் ஒரு பெரிய ரீச் கிடைப்பது நிச்சயம். இந்த படத்திற்கு இசையமைக்க மிகவும் எதிர்நோக்கியுள்ளேன்.” என்றார்.

 

வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கிறார்.

Related News

1572

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...