காமெடி நடிகராக வலம் வந்த லொள்ளு சபா ஜீவா, ’ஆரம்பமே அட்டகாசம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘கொம்பு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம்.பன்னீர் செல்வம், பி.வானதி ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இ.இப்ராகிம் இயக்குகிறார்.
இதில் ஹீரோயினாக திஷா பாண்டே ஹீரோயினாக நடிக்க, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வா் சந்திரபாபு, காயத்ரி, புவிஷா, சங்கா், அஸ்மிதா, யோகிராம், இன்னும் பலா் நடிக்கின்றனா்.
தேவ்குரு இசையமைக்கும் இப்படத்திற்கு சுதீப் ஒளிப்பதிவு செய்ய, கதிரேசன் படத்தொகுப்பு செய்கிறார். கஜினி குபேந்தர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிக நடனம் அமைக்கிறார். இ.கார்த்திகேயன் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
இரு இளம்பெண்களின் மர்ம மரணத்தை ஆராய்ச்சி செய்ய ஹீரோ தலைமையில் ஐவர் குழு, கொலை நடந்த வீட்டிற்கு செல்கிறது. அதன் பிறகு நடைபெறும் சம்பவங்களை, நகைச்சுவை மற்றும் திகில் கலந்து சொல்லியிருப்பது தான் ‘கொம்பு’ படத்தின் கதையாம்.
தேனி, மதுரை, ஈரோடு, பொள்ளாச்சி, கம்பம், போடி நாயக்கனூர், கோபி செட்டிபாளையம் ஆகிய படகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் ‘கொம்பு’ இறுதி படப்பிடிப்பில் உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...