நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள், நடிகர்களைப் போல நடிப்பதோடு, படம் தயாரிப்பது உள்ளிட்ட பிற தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
திரிஷா, நயந்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர். ரகுல்ப்ரீத் சிங், ஸ்ரேயா உள்ளிட்ட நடிகைகள் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பியூட்டி பார்லர் போன்ற தொழில்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், நடிகைகள் நடிப்பதை மட்டும் நம்பாமல் பிற தொழில்களிலும் ஈடுபட வேண்டும், என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “கதாநாயகிகள் சினிமா தான் உயிர் என்று இருக்கிறார்கள். எப்போதும் நடித்துக்கொண்டே இருப்போம் என்றும் நம்புகின்றனர். அது தவறு. சினிமா நிரந்தரமானது அல்ல. மார்க்கெட் போனதும் ஓரம் கட்டி விடுவார்கள். எனவே சினிமாவை தவிர்த்து இன்னொரு உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வது? என்று நான் சிந்திக்க தொடங்கி இருக்கிறேன். வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நடிகைகள் ஏதேனும் ஒரு வியாபார தொழிலில் ஈடுபட வேண்டும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
நான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறி விட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நீடிப்பேன். அதன்பிறகு வேறு துறைக்கு மாறி விடுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...