கடந்த மே மாதம் மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த், அப்போது அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தகவல் வெளியானாலும், இப்போது வரை ரஜினிகாந்தும், அரசியலும் என்றால் அது குழப்பம் என்ற பொருள் தான் கிடைக்கின்றது.
இதற்கிடையே, மே மாதம் ரஜினிகாந்த் சந்திக்காத மாவட்ட ரசிகர்களை விரைவில் சந்திக்க உள்ளார் என்றும், அப்போது அரசியல் குறித்து தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் எப்போது மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார், எந்த எந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார், என்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வருகிற 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 6 நாட்கள் ரசிகர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் 1,000 ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
26 ஆம் தேதி காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். 27 ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
28 ஆம் தேதி மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 29 ஆம் தேதி கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார். 30 ஆம் தேதி மற்றும் 31 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார்.
ரஜினிகாந்தை சந்திக்க ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சால்வை, மாலைகள் அணிவிக்க கூடாது என்றும், காலில் விழக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தோளில் கைபோடக்கூடாது, கையை பிடித்து குலுக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...