இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பினை திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில், சில பிரபலங்கள் தீர்ப்பு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் பிரசன்னாவும் 2ஜி வழக்கு தீர்ப்பு குறித்து தனது கருத்தினை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து இதோ,
தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
— Prasanna (@Prasanna_actor) December 21, 2017
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...