விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாலிவுட் நடிகர்கள் முதல் வட இந்திய அரசியல் தலைவர்கள் வரை மெர்சல் படம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
எந்த அளவுக்கு சர்ச்சையை சந்தித்ததோ, அதே அளவுக்கு வசூலிலும் பெரிய சாதனைப் படைத்த ‘மெர்சல்’ ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உலக அளவில் ரூ.250 கோடி வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஜினிகாந்தின் ‘கபாலி’ 22 வது இடத்தை பிடித்துள்ளது. ரஜினிகாந்தை தொடர்ந்து விஜயின் ‘மெர்சல்’ 25 வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை இந்த பட்டியலில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...