Latest News :

கோடம்பாக்கத்தில் பின்னணி பாடகராக பிரபலமாகும் நார்வே தமிழர் டி.எஸ்.ஜெயராஜன்
Friday December-22 2017

உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழகர்கள் தமிழ் திரையுலகை நேசிப்பதோடு, அதில் தாங்களும் பணியாற்ற வேண்டும், தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுபோல கடல் கடந்து வந்து சாதிப்பவர்கள் பலர் உண்டு. அதில் புதிதாக இணைந்திருப்பவர் தான் பின்னணி பாடகர் டி.எஸ்.ஜெயராஜன்.

 

நார்வே நாட்டில் வசிக்கும் டி.எஸ்.ஜெயராஜன், தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற சாய்பாபா பற்றிய திரைப்படமான ‘அபூர்வ மகான்’ படத்தில் இரண்டு பாடல்களை பாடி, பின்னணி பாடகராக அறிமுகமானார். தஷி இசையமைப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது போல, டி.எஸ்.ஜெயராஜின் குரலும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இதைத் தொடர்ந்து, தஷி இசையமைப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ஹார்ட் பீட்’, ‘மாய வீடு’ ஆகிய படங்களிலும் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜனுக்கு, மேலும் பல படங்களில் பாட வாய்ப்புகள் வந்துள்ளது.

 

திரைப்படங்களில் பாடுவதோடு, பல இசை ஆல்பங்களில் பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், ஐயப்பன், சாய் பாபா, வள்ளலார் ஆகியோர் பற்றிய 50 க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை பாடி தயாரித்துள்ளார். பக்தி பாடல்கள் பாடுவதை தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக வைத்திருக்கும் இவர், பக்தி பாடல்களை எழுதி பாடுவதோடு, தனது சொந்த செலவிலேயே இசை ஆல்பங்களாக தயாரித்து, அதை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

 

இப்படி பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இலவசமாக பக்தி பாடல்கள் ஆல்பத்தை வழங்கி வரும் டி.எஸ்.ஜெயராஜனின் தொண்டை கெளரவிக்கும் வகையில், இண்டர்நேஷனல் கிளோபல் பீஸ் யுனிவர்சிட்டி (International Global Peace University) கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது சாதனைகளை பாடல்களாக பாடியுள்ள டி.எஸ்.ஜெயராஜன், அப்பாடல்களை சிடி-யாக தனது சொந்த செலவில் தயாரித்துள்ளார். எப்போதும் போல இந்த பாடல்கள் சிடி-யையும் அவர் நார்வே மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1594

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery