தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வரும் நடிகர்களில் விக்ராந்தும் ஒருவர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட கிரிக்கெட் விளையாடி பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.
சினிமா நடிகர்கள் விளையாடும் சிசிஎல் என்ற கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் சினிமா நடிகர்களின் அணியில் நட்சத்திர வீரராக விக்ராந்த் திகழ்ந்து வந்தார். இவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்வார். இதனால், விக்ராந்தின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.
இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில், தமிழ் சினிமா நடிகர்கள் அணியில் இருந்து விக்ராந்த் வெளியேறிவிட்டார். மேலும், இனி சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் தான் விளையாட போவதில்லை என்றும் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்ராந்த், ”இந்த வருடம் நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என்று கூறியுள்ளார்.
விக்ராந்த் அணியில் இருந்து வெளியேறும் அளவுக்கு அணியில் நடந்தது என்ன?, விக்ராந்தை அவமானப்படுத்தியது யார்? என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...