ரஜினி - கமல் இருவருக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக திகழ்வது அஜித் மற்றும் விஜய் தான். இவர்கள் படம் மட்டும் அல்ல, இவர்கள் பற்றி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
ஆனால், இருவருக்கும் இடையே ரொம்பவே வித்தியாசம் உண்டு. ரசிகர்களை அரவனைத்து செல்லக் கூடியவர் விஜய். ஆனால், அஜித்தோ ரசிகர்கள் வேண்டாம், அவர்கள் அவர்களது வாழ்க்கையை பார்க்க வேண்டும், என்று அறிவுரை சொல்வார். ரசிகர்கள் வேண்டாம், என்று சொன்னாலும், இப்போதும் அஜித்தின் ஒவ்வொரு படத்தின் ரிலிஸின் போதும், அவரது ரசிகர்கள் பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், விஜயின் ‘மெர்சல்’ எதிர்பாராத வெற்றியை பெற்றுவிட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
தற்போது, அஜித் ரசிகர்கள் உற்சாகமடையும் தருணம் வந்துவிட்டது. படத்தின் வசூல், ரிலிஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை போன்றவற்றில் அஜித்தை விஜய் பின்னுக்கு தள்ளிவிட்டார், என்று விஜய் ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, தற்போது அஜித் விஜயை ஒரு விஷயத்தில் பின்னுக்கு தள்ளியுள்ளது அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
வருடம் வருடம் போர்ப்ஸ் இந்தியா மிகச் சிறந்த பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் பலர் இடம்பிடித்தாலும், தமிழகத்தை பொருத்தவரை விஜய் மற்றும் அஜித் ஆகியோர் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தான் முக்கியமாக பார்க்கிறார்கள்.
அதன்படி, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் அஜித் 30 வது இடத்தையும், விஜய் 40 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதன் மூலம் அஜித் விஜயை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...
யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...