சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், தற்போதைய தலைவர் அருள்பதி தலைமையில் ஒரு அணியும், அவர்களை எதிர்த்து பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.
விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவே தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள கே.இ.ஞானவேல்ராஜா, அருள்பதி விநியோகர் சங்க பதவியை வைத்து பல முன்னணி தயாரிப்பாளர்களிடம் பணம் பறிப்பதோடு, சில முன்னணி நடிகர்களிடமும் பணம் பறித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதில் முக்கியமானவர் அஜித். ‘விவேகம்’ படத்தின் தோல்வியை முன் வைத்து அவரிடம் இருந்து ரூ.2 கோடியை அருள்பதி பறித்ததோடு, ‘தொடரி’ படத்தின் நஷ்ட்டத்திற்காக தயாரிப்பாளர் தியாகரஜனிடம் இருந்து ரூ.1 கோடியை பறித்தாராம். ஆனால், இந்த பணம் எதையும் நஷ்ட்டம் அடைந்தவர்களுக்கு கொடுக்காமல் அவரே எடுத்துக்கொள்வதோடு, தனது பதவியை வைத்து போலியான புகார்கள் மூலம் பஞ்சாயத்து என்ற பெயரில், பல பெரிய படங்களின் விநியோக உரிமைய பறித்த பல கோடிகள் சம்பாதித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை தடுத்து, சினிமா தொழிலை நேர்மையான ஒரு தொழிலாக மாற்றுவதற்காகவே விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிருவதாக கூறிய ஞானவேல்ராஜா, இந்த தேர்தலுக்குப் பிறகு மதுரையை ஆட்டிப்படைக்கும் அன்புசெழியனின் அட்டூழியத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக கூறியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...