கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசியல் குறித்து பேசினாலும், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு, தற்போதும் குழப்பமாகவே உள்ளது. இதனால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் அரசியலுக்கு வருவார், என்றும் கூறி வருகிறார்கள்.
தற்போது ரசிகர்களை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ரஜினிகாந்துக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. இதனால் அவர் அரசியலில் நுழைந்தால் மிகப்பெரிய தோல்வியை சந்திப்பார், என்று சில ஜோதிடர்கள் கணித்துள்ளதால், அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...