Latest News :

டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் - பிரகாஷ் ராஜ் பெருமிதம்
Saturday December-23 2017

க்ரீன் சிக்னல்  கம்பெனி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டு வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்தப் படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத்தழுவி எடுக்கப்படும் படமாகும். 

 

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருடைய மனைவியாக ரோகினி நடிக்கிறார் . இவர்களுடன்  ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் ஆகியவரும் நடிக்கின்றனர். 

 

இப்படத்தில் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் கெளரவ தோற்றத்தில் பங்குபெறுகிறார்கள்.

இவர்கள் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்குப்  பெரும் விருந்தாக இருக்கும்.

 

பிரகாஷ் ராஜ் இப்போது ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த அதிரடியான போலீஸ் கமிஷ்னராக  நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

 

இதைப் பற்றிப் பிரகாஷ்ராஜ்  கூறும் போது “வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நான் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். 

 

இப்படத்தின்  ஒளிப்பதிவை குகன். எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும், கலையை வனராஜ் அவர்களும் கவனிக்கிறார்கள்.

Related News

1602

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery