‘கோலி சோடா’ என்ற மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த விஜய் மில்டன், ‘கோலி சோடா 2’ படத்தை மிகப்பெரிய அளவில் இயக்கி வருகிறார். தற்போது, முழுப்படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது.
இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “நாங்கள் திட்டமிட்டபடியே 'கோலி சோடா 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, சிறப்பாக முடித்துள்ளோம். மிகப்பெரிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்த எனது அணியினருக்கும், படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 'கோலி சோடா' மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எனது உழைப்புக்கு மேலும் மதிப்பை கூடியுள்ளது. எங்களது உழைப்பும், அர்ப்பணிப்பும் 'கோலி சோடா' போல் 'கோலி சோடா 2' படத்தையும் சிறப்பாக்கி வெற்றி பெறவைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
'கோலி சோடா 2' படத்தை 'Rough Note' நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, செம்பன் ஜோஷ், பரத் சீனி, வினோத், ஐசக் பரத், சுபிக்ஷா, க்ரிஷா, ரக்ஷிதா , ரோகினி , ரேகா , சரவணா சுப்பையா , மற்றும் ஸ்டண்ட் ஷிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கிய கவுரவ தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...