நயந்தாராவை போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ஆர்.மாதேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு டிரைலர் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதே பொங்கலுக்கு தான் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ரிலிஸாக உள்ளது. சூர்யா படத்திற்காக அதிகமான தியேட்டர்களை கைப்பற்ற தயாரிப்பு தரப்பு முயற்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு போட்டியாக ‘மோகினி’ குழுவும் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா இருந்தாலும், அஜித், விஜய் போன்ற ஹீரோக்கள் போல ஓபனிங் இல்லாதவர் சூர்யா, என்பதால் அவரது படத்துடன் திரிஷாவின் ‘மோகினி’ யை மோதவிடவும் முடிவு செய்துள்ளார்களாம்.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...