Latest News :

கிராமத்து காதல் கதையாக உருவாகிறது ‘சென்னை பக்கத்துல’
Sunday December-24 2017

டி.சி.பி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ‘சென்னை பக்கத்துல’.

இந்த படத்தில் எஸ்.சீனு  என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும்  மாணிக்கவிநாயகம், அஞ்சலிதேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், வாசுவிக்ரம், கோவை செந்தில், ரஞ்சன், நெல்லை சிவா, விஜய்கணேஷ், கிங்காங் ஆகியோர் நடிக்க, கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

 

மகிபாலன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜித்தின் கே.ரோஷன் இசையமைக்க, ஸ்ரீ கலைத்துறையை கவனிக்கிறார். சி.மணி எடிட்டிங் செய்ய, தீனா நடனம் அமைக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கும் வேலவன் படம் குறித்து கூறுகையில், “இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால்  வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூகவலை தலங்களில் காதல் மிகவும் கேவலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி காதல் அழிந்து கொண்டிருக்கு இந்த நேரத்தில் இன்னும் கிராமபுறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். அனைத்து இளைஞர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.

 

தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்கவிநாயகம் வாழ்ந்து இருக்கிறார்.” என்றார்.

Related News

1611

உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது - நடிகை ரக்‌ஷிதா நெகிழ்ச்சி
Monday January-05 2026

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் சார்பில் எம்...

’சிறை’ பட நடிகர் ரகு இசக்கிக்கு குவியும் பாராட்டுகள்!
Sunday January-04 2026

விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Sunday January-04 2026

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...

Recent Gallery