ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்டதன் மூலம் ஜல்லிக்கட்டு போராளியாக அறியப்பட்ட ஜுலி, அதில் கிடைத்த பாப்புலாரட்டி மூலம், பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பெரிய அளவில் பிரபலமானாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.
இந்த ஆண்டு அதிக மக்களால் வெறுக்கப்பட்டவர்கள் பட்டியலை தயாரித்தால் அதில் ஜுலிக்கு முதலிடம் நிச்சயம். இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியால் ஜுலி, திரைப்படத்தில் நடிப்பதோடு, பிரபல சேனலில் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவருக்கு பல லட்சங்கள் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விளம்பரப் படங்களிலும் ஜுலி நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடித்த அப்பளம் விளம்பரம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைவிடம், அந்த விளம்பரப் படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பள தொகை ரொம்ப வைரலாக பரவி வருவதோடு, பிற பிக் பாஸ் போட்டியாளர்களை வயித்தெரிச்சல் படவும் வைத்துள்ளதாம்.
சினிமாவுக்கு சம்மந்தம் இல்லாத ஒருவரான ஜுலி, வெறும் பிக் பாஸ் போட்டியில் கிடைத்த பாப்புலாரிட்டியை வைத்துக்கொண்டு, போகும் இடமெல்லாம் இப்படி பல லட்சங்கள் சம்பளமாக வாங்க, பிக் பாஸுக்கு முன்பே தமிழக மக்களிடம் பிரபலமாக இருக்கும் தங்களால், ஒன்னுத்தையும் செய்ய முடியலய, என்று சில பிக் பாஸ் போட்டியாளர்கள் புலம்புகிறார்களாம்.
ஆம், ஒரு சில நிமிடங்கள் ஓடும் அந்த விளம்பரப் படத்திற்காக ஜுலி ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...