சிவகார்த்திகேயன், நயந்தாரா ஆகியோரது நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ‘வேலைக்காரன்’ கடந்த 22 ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள வேலைக்காரன், உலகம் முழுவதும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘தனி ஒருவன்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதாலும், சிவகார்த்திகேயன் - நயந்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, நல்ல மெசஜும் சொல்லியிருக்கிறது.
இந்த நிலையில், படம் வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது.
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் ரூ.8 கோடி வசூல் படைத்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் ரூ.2.8 கோடி வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருவதால், படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணித்துள்ள சினிமா வியாபாரிகள், மாஸ் ஹீரோக்களின் படங்களின் வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் தன்னையும் ஒரு மாஸ் ஹீரோவாக நிரூபித்துவிட்டார், என்று கூறியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...