Latest News :

தினகரன் பக்கம் சாயும் விஷால்!
Monday December-25 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, விஷாலைப் பார்த்து அரசியல் கட்சிகள் பயந்துவிட்டனர் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஷால், அவருக்கு பக்கபலமாக இருப்பதாகவும், வாக்குறுதி அளித்துள்ளார்.

 

இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

 

தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Related News

1616

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery