தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால், அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ’விவேகம்’, ‘மெர்சல்’ என்று இந்த ஆண்டு இரண்டு முன்னணி ஹீரோக்கள் படத்திலும் நடித்துவிட்டார்.
முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாலும், தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் விதத்திலான கதாபாத்திரங்கள் அமையவில்லை, என்ற வருத்தம் காஜல் அகர்வாலுக்கு இருக்கிறதாம். அதனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை எதிர்ப்பார்த்தவர் பெருத்த ஏமாற்றம் அடைந்துவிட்டாராம். தற்போது அவர் நடித்து வரும் ‘குயின்’ படத்தை தான் பெரிதும் நம்பியிருக்கிறாராம்.
‘குயின்’ வெற்றி பெற்றால், தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் முடிவில் இருப்பவர், அப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றால், நடிப்புக்கு முழுக்கு போட்டும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நடிப்பதை நிறுத்துபவர், தொழிலில் கவனம் செலுத்த போகிறாராம். அப்படி அவர் தொழில் தொடங்கி விட்டால், அதை விட்டுவிட்டு மீண்டும் நடிக்க வர மாட்டாராம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...